×

3 மாதத்தில் தேர்தல், ஆனால் 3 வருடங்கள் ஆகிவிடும்போல் தெரிகிறதே? நடிகர்கள் புலம்பல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியானபோது கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய தேர்தல் செல்லாது என்றும் அதற்கு பதிலாக மூன்று மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது

இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த விஷால் அணியினர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் வரும் திங்கட்கிழமை இது குறித்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் விஷால் பேட்டி அளித்துள்ளார். இதனால் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு சென்றால் வழக்கு முடிய குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகிவிடும் என்றும் அதற்கு பதிலாக மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என்றும் முன்னணி நடிகர்கள் விஷாலிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஆனால் விஷால் விடாப்பிடியாக மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளதால் மூன்று மாதத்தில் தேர்தல் நடக்க வேண்டிய தேர்தல் மூன்று வருடங்கள் கழித்து நடக்கும் போல் தெரிகிறது என்று நடிகர்கள் புலம்பி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

From around the web

Trending Videos

Tamilnadu News