×

வனிதாவை கிழித்து தொங்கவிட்டுட்டாங்க... சூர்யாதேவியுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட எலிசபெத்!

நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.

 

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதை அடித்து வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு தினம் தினம் ஒரு பிரச்னை வருகிறது.

இந்நிலையில் வனிதாவுக்கு எதிராக சூர்யா தேவி என்ற பெண் கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்ட வீடியோக்களும் அதற்கு பதிலடி கொடுத்த வனிதாவின் வீடியோக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்ப்போது அந்த பெண் பீட்டரின் முன்னாள் மனைவி எலிசபெத் துடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு வனிதாவை திட்டியுள்ளனர். வனிதாவுக்கு எதிராக பெரிய கூட்டணியே சேர்ந்துவிட்டதாக கூறி இந்த வீடியோவை மிகப்பெரிய அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News