Categories: Cinema News latest news throwback stories

என்னை தூக்குனதுமே அவர் கண்டுப்புடிச்சிட்டார்.! –ரஜினிக்கும் அந்த நடிகைக்கும் மட்டும் தெரிஞ்ச சீக்ரெட்!..

சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பலரும் பல விதமான அனுபவங்களை கொண்டிருப்பார்கள். அதில் கசப்பான அனுபவங்களும் இருக்கும். சில சுவாரஸ்யமான அனுபவங்களும் இருக்கும்.

நடிகர் ரஜினிகாந்திற்கும் ஷோபனாவிற்கும் இடையே அப்படி ஒரு அனுபவம் நடந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடித்தார்.

rajini2

தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் கவர்ச்சி பாடல் என்றாலே மழை பெய்ய வைத்து எடுப்பது வழக்கம். முக்கால்வாசி கதாநாயகிகள் அப்போது இந்த மாதிரியான மழை காட்சிகளில் நடித்திருப்பார்கள். அந்த மாதிரி சிவா படத்திலும் இரு விழியின் வழியே நீதான் வந்து போனது என்ற பாடல் இடம் பெற்றது.

இந்த பாடலுக்காக ஷோபனா மழையில் நடனமாட வேண்டும். ஆனால் அதுக்குறித்து எதுவுமே ஷோபனாவிற்கு தெரியாது. அவர் சாதரணமாக உடுத்தி வரும் உடையில் வந்துவிட்டார். அங்கு வந்து பார்த்தால் நைஸ் துணியில் செய்த வெள்ளை புடவையை வைத்திருந்தனர்.

நடிகை செய்த வேலை:

அப்போதுதான் மழையில் ஆடும் நடனக்காட்சியை படமாக்க போவதை கூறியுள்ளனர். அந்த புடவையில் தண்ணீர் பட்டால் பிறகு நமது உடல் அங்கங்கள் அப்படியே தெரியும். உடலை மறைக்கு அளவில் எந்த துணியையும் ஷோபனா அணிந்து வரவில்லை. இனி திரும்ப வீட்டிற்கும் சென்று வர வாய்ப்பில்லை. என்ன செய்யலாம் என யோசித்தார் ஷோபனா.

அப்போது அங்கு மேசையில் ஒரு ப்ளாஷ்டிக் வெள்ளை மேசை விரிப்பு இருந்தது. அதை எடுத்து பாவாடை போல சுற்றிக்கொண்டு அதன் மேல் புடவையை கட்டிக்கொண்டார் ஷோபனா. நடனம் ஆடுவதற்கு எல்லாம் தயாரானது. முதல் காட்சியே ரஜினி ஷோபனாவை தூக்க வேண்டும்.

ரஜினியும் ஷோபனாவை தூக்கினார். தூக்கும்போது ஏதோ மொற மொறவென்று சத்தம் கேட்டுள்ளது. உடனே சந்தேகமாக ஷோபனாவை பார்த்துள்ளார் ரஜினி. அதன் பிறகு யாரிடமும் இதுக்குறித்து ரஜினி கூறவில்லை. அதை ஒரு ரகசியமாகவே வைத்திருந்தார். கடைசியாக ஷோபனாதான் ஒரு பேட்டியில் இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

Rajkumar
Published by
Rajkumar