×

பாகுபலி நடிகருக்கு நிச்சயதார்த்தம் – மணப்பெண் யார் தெரியுமா?

பாகுபலி வில்லன் நடிகர் ராணாவுக்கு அவரது காதலிக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

பாகுபலி வில்லன் நடிகர் ராணாவுக்கு அவரது காதலிக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பாகுபலி படத்தில் நடித்த ராணா டக்குபாடி அதன் பின்னர் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் ஆனார். மேலும் நடிகை த்ரிஷாவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்ட அது உண்மையில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவரின் திருமண செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

இண்டீரியர் டிசைனராக இருக்கும் பெண் ஒருவரை அவர் காதலிக்க, இரு குடும்பமும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. தற்போது கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இரு வீட்டார் மட்டும் கலந்துகொண்ட அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News