×

என்னம்மா கலர் கலரா ரீல் விட்ற… கங்கனா சொன்ன பொய் – ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அந்த கதாபத்திரத்துக்கு 20 கிலோ எடையை ஏற்றினேன் என கூறியுள்ளார்.

 

தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அந்த கதாபத்திரத்துக்கு 20 கிலோ எடையை ஏற்றினேன் என கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இயக்குனட் ஏ எல் விஜய் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில்  கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் சில ஏற்கனவே வெளியாகி இருந்தன. அதில் கங்கனா ஸ்பெஷல் மேக் அப் மூலமாக ஜெயலலிதா போல குண்டான தோற்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த கங்கனா தலைவி படத்தில் ஜெயலலிதா போல தோற்றமளிக்க தான் 20 கிலோ வரை எடையை ஏற்றியதாக கூறினார். ஆனால் அவர் அப்படி ஒன்றும் எடையை ஏற்றவில்லை. சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் எல்லாவற்றிலுமே அவர் எப்போதும் போல ஒல்லியாகவே உள்ளார் என நெட்டிசன்கள் அவரை கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News