×

என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க… தெலுங்கில் ரீமேக் ஆகும் பிங்க் படத்தின் போஸ்டர்!

2016 ஆம் ஆண்டு வெளியான பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

2016 ஆம் ஆண்டு வெளியான பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு அமிதாப் மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் இந்தியா முழுவதும் அதிர்வுகளை உருவாக்கியது.  அந்த படத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்றால் பல ஆண்டுகளாக மசாலா படங்க்ளாகவே நடித்து வந்த அஜித் அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அளவுக்கு. தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே தில் ராஜுவுடன் இணைந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் பவன் கல்யாண் ஏதோ ஆக்‌ஷன் ஹீரோ போல கையில் லத்தியுடன் ஆவேசமாக நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதார்த்தமான ஒரு படத்தை வழக்கமான தெலுங்கு மசாலா படம் போல உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News