கட்டுக்கதைகளை தவிடு பொடியாக்கி நடை போடும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் : அதிமுக ரசிகர்கள் உற்சாகம்

அதிமுகவை துவங்கியது எம்.ஜி.ஆர் என்றாலும் அவரின் மறைவுக்கு பின் கட்சியை ஆளுமையுடன் வழி நடத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஜெ.வின் மறைவிற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இரட்டைக்க் குழல் துப்பாக்கி போல ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்த கருத்தாவது:
எங்கள் அம்மாவின் மறைவுக்கு பின் அதிமுக என்னவாகுமோ என்கிற பயமும், கலக்கும் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதை எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தகர்த்து எறிந்துவிட்டனர்.
கடந்த 4 வருடங்களுக்கும் மேல் அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவது பல மாநிலத்தை சேர்ந்த அரசிய்வாதிகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். அதற்கு முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் அண்னன் ஓ.பன்னீர் செல்வமுமே காரணம். இருவரும் சிறப்பாக ஆட்சியை நடத்தி அதிமுக தொண்டர்களின் நெஞ்சத்தில் பாலை வார்த்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றவுடன் அதிமுக ஆட்சி 2 மாதத்திற்கு மேல் நீடிக்காது எனக்கூறினர். ஆனால், 4 வருடங்களுக்கும் மேல் பழனிச்சாமி திறம்பட ஆட்சி செய்து வருகிறார். மேலும், பழனிச்சாமிகும், பன்னீர் செல்வத்திற்கும் உள்ளூற புகைச்சல் இருக்கிறது. எந்த நேரமும் பிரிவு ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரப்பப்பட்டது. எனவே, அதிமுக தொண்டர்கள் கலக்கம் அடைந்தனர். ஆனால், தங்களுடைய செயல்பட்டால் பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியை ஓ.பன்னீர் செல்வமே அறிவித்து அதை ஏற்றுக்கொண்டார். அதன்பின், சசிகலா விடுதலைக்கு பின் அதிமுகவில் மாற்றம் நிகழும் எனவும், சசிகலா பக்கம் ஓ.பி.எஸ் செல்வார் என்றும் கூறிவந்தனர். ஆனால், இதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் பதில் அளித்துவிட்டார்.
மொத்தத்தில் மருது சகோதரர்கள் போல் இருவரும் ஒன்றாக செயல்பட்டு அதிமுக தொண்டர்களை கலக்கத்திலிருந்து மீட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் இருவரால் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். அதிமுகவை உடைக்கும் சதியை இருவரும் இணைந்து தவிடு பொடி ஆக்கிவிட்டனர். எந்த மாநிலத்திலும் இரு தலைவர்கள் இப்படி ஒன்றாக செயல்பட்டு பார்க்கவில்லை. அவர்கள் வழிகாட்டுதழில் அதிமுக இன்னும் உயரத்திற்கு செல்லும்’ என அவர்கள் கூறினர்.