×

அதிமுகவை அரியணையில் ஏற்ற உறுதி ஏற்போம் - இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலி

 

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு தினமும் இன்று அதிமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும், அவர்களது முன்னேற்றத்திற்காகவும் சரித்திரத் திட்டங்கள் பல வகுத்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்களது 33-வது நினைவுதினத்தை முன்னிட்டு, இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினேன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதேபோல், பெரியாருக்கும் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். 


அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டிவிட்டரில் ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பொற்கால ஆட்சி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி, விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி, "மக்கள் தான் எஜமானர்கள் என நினைக்கும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர" ஒற்றுமையுடன் நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு உளமார பாடுபடுவோம்!’ என பதிவிட்டுள்ளார்


 

From around the web

Trending Videos

Tamilnadu News