×

தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் - முதல்வரின் அதிரடி அறிவிப்பு

 

தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:

ஏழை எளிய மக்களுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் வருகிற 31ம் தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும். கிராமப்புற மக்களுக்காக நடமாடும் மருத்துவக்குழுவும் செயல்பட்டு வருகிறது.

நான் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதனால் அடுத்த வரும் 435 மாணவ, மாணவியர்களுக்கு இடம் கிடைக்கும் என அவர் பேசினார்.

மேலும், ரூ.26.52 கோடி மதிப்பில் 14 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.129.34 கோடி மதிப்பீட்டில் 21,504 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News