×

முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்…? பணிந்துபோனாரா ஓபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியெ மீண்டும் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியெ மீண்டும் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் இரண்டான அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி என்றானது. ஒரு கட்டத்தில் இந்த இரு அணியும் ஒன்றாகியது. எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராகவும், ஓ பன்னீர் செல்வம் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் தேர்தலை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அக்டோபர் 7 ஆம் தேதி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதற்கான செயற்குழு நடந்துவருகிறது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. அதுபோல 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு ஓ பன்னீர் செல்வம் தலைவராக இருப்பார் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News