2 ஆயிரம் கோடி செலவில் டி.என்.பி.எல் தொழிற்சாலை விரிவாக்கம் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் காரணத்தால் ஸ்ரீரங்கம் தொகுதி தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவரித்தார். அப்போது திருச்சி டி.என்.பி.எல் தொழிற்சாலை ரூ.2 ஆயிரம் கோடி செலவில் விரிவக்கம் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்தார். அதோடு, முக்கொம்பு கதவணை திட்டப்பணிகள் 3 மாதத்திற்குள் செயல்படுத்தக் கூடும் எனவும் கூறினார்.
இறுதியாக, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் முடிவில் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்க வேண்டும் எனவும், அதற்கு இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டிக்கொண்டார்.