×

தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீர் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 

 
தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீர் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரின் சிறப்பான நடவடிக்கையால் தினமும் 6 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட கொரோனா பாதிப்பு தற்போது 2500 ஆக குறைந்துள்ளது.

அதேபோல், தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகள் மக்களிடம் நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது. எனவே, மக்கள் பயன்படுத்தும் நீர் மூலம் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீரை வினியோகிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News