×

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை 

 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் செயலாற்றி வருகிறது.

நீட் தேர்வு கட்டாயமக்கப்பட்ட நிலையில் அத்தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்கர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என தமிழக அரசு சார்பில் மசோதா நிறைவேற்றப்பட்டு 45 நாட்களுக்கு முன்பே ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதோடு, மேலும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், அதிரடி நடவடிக்கையாக மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News