×

கட்சியிலும் ஆட்சியிலும் அசுர பலத்துடன்  ஈபிஎஸ்… கையைப் பிசையும் ஓபிஎஸ்!

அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பலம் குறைந்துகொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

 

அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பலம் குறைந்துகொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைப்பு ஏற்பட்டதில் இருந்தே அவர்களுக்கு சிறு சிறு மோதல்கள் நடந்து வந்தன. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து ஆட்சியிலும் கட்சியிலும் தானே மையம் என்பதை நிரூபித்து வருகிறார் ஈபிஎஸ். இன்னும் 7 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளதால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இப்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட சிறு சலசலப்புகள் தோன்றின. இந்நிலையில் இப்போது ஓபிஎஸ் பலம் கட்சிக்குள் குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் ஆதரவாளர்களுக் முதல்வருக்கு ஆதரவாக செலவதாக ஓபிஎஸ்க்கு தகவல் வர அடுத்து என்ன செய்வது எனக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறாராம் ஓபிஎஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News