×

மருத்துவம் படிக்கும் ஆட்டோ ஓட்டுனர் மகன் : வாழ்த்தி ஆணை வழங்கிய முதல்வர்

 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் செயலாற்றி வருகிறது.

சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில்,  7.5 சதவீத ஒதுக்கீட்டை அறிவித்து அரசாணை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மருத்துவ படிப்பில் சேரும் 18 அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வழங்கினார். அப்போது மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

eps

7.5 சதவீத இட ஒதுக்கிட்டால் பல ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவ கனவு நினைவாகியுள்ளது. எனவே, அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடத்தில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர். இந்த வருடம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் பலரும் மருத்துவ படிப்பை படிக்கவுள்ளனர்.

இந்நிலையில், தென்சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சூளைமேடு அருணாச்சலம் நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவரின் மகன் நரசிம்மன் 7.5 சதவீத இட ஒதுக்கிட்டால் மருத்துவ படிப்பை படிக்கவுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த மாணவருக்கு பாராட்டு தெரிவித்து, மருத்து படிப்பிற்கான ஆணையையும் வழங்கியுள்ளார்.

மேலும், மாணவன் நரசிம்மனை மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பரிசுகளையும் வழங்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News