×

7 பேர் விடுதலை ; நிராகரித்தது திமுக ; சட்டம் இயற்றியது அதிமுக : விளாசிய முதல்வர்

7 பேர் விடுதலை தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் எடுத்தது அதிமுக அரசுதான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வெண்டும் என்கிற கோரிக்கை பல வருடங்களாக தமிழகத்தில் எழுந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் சமீபத்தில் இக்கருத்தை வலியுறுத்தினார்.

இந்நிலையில், கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

ஏழு பேரின் விடுதலை குறித்து ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார். உண்மையிலேயே திமுகவிற்கு அக்கறை இருந்திருந்தால் 2002ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது நளினியின் தூக்கு தண்டனையை மற்றும் ஆயுள் தண்டனையாக மாற்றினர். மற்றவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போது அவர்கள் மீது அக்கறை இருப்பது போல் நாடகமாடி வருகிறார்கள்.

உண்மையில் 7 பேர் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பது அதிமுக அரசுதான். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார் அம்மா (ஜெயலலிதா). அது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே, இதில், அவர்தான் முடிவு செய்ய முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றமும் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளதால், கடந்த 2 நாட்களாக ஆளுனர் பன்வாரிலால் டெல்லியில் முகாமிட்டு பிரதமர், அமித்ஷா உள்ளிட்ட பலரையும் சந்தித்து இதுபற்றி ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News