Jana Nayagan : குடிசை வீட்டில் விஜய்யின் 'ஜன நாயகன்' கதை விவாதத்தை செய்த ஹெச்.வினோத்!

 
Jana Nayagan

தமிழக முதல்வர் விஜய்யை வைத்து ஹெச்.வினோத் இயக்கிய 'ஜன நாயகன்' படம் இன்று ரிலீஸ் ஆகி விட்டது. படத்தை பார்த்த தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது, இந்த படத்தின் கதை விவாவதம் குறித்து சசிகுமாரின் 'உடன்பிறப்பே, நந்தன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் எக்ஸ் தளத்தில் "'வா போகலாம்…' என்றுதான் அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவருடைய உதவி இயக்குநர்கள் இருவர், நான் என நான்கே பேர்.

H Vinoth Era Saravanan

விஜய் சார் பட கதை விவாதம் என்றார்கள். பெரிய ஹோட்டலில் ரூம் போட்டுத்தானே கதை விவாதம் நடக்கும்… இவர் ஒரு மலைப்பகுதியின் குடிசை வீட்டுக்குக் கூட்டிப் போனார். எளிய இடம், எளிய உணவு எனக் கிட்டத்தட்ட ஒரு சாமியார் கணக்காகத்தான் வாழ்ந்தார். பேய்த்தனமாகப் பேசி, விவாதித்து முழு நிறைவு வந்த ஒரு நாளில், நிம்மதியாய் பாறைகளின் மேல் படுத்து உறங்கினார் வினோத். 

'இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிடச் சிறியவர்கள்…' எனச் சொல்லிச் சொல்லி, எதையுமே தலைக்கு ஏற்றிக்கொள்ளா தன்மையோடு வாழும் தம்பி வினோத் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார். ‘ஜனநாயகன்’ வெல்லட்டும்; ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web