×

குட்டி ஹரிஜா இஸ் ஆன் தி வே... கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எரும சாணி ஹரிஜா!
 

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எரும சாணி ஹரிஜா!
 
 

பிரபல யூடியூப் சேனலான எருமை சாணியில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு கிடைத்த பெரும் புகழை வைத்து படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.

கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படியிருந்தும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. துரு துறுன்னு குழந்தை போல பேசி ரசிக்க வைத்த ஹரிஜா தற்போது இன்ஸ்டாகிராமில் எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார். ஆம், அம்மணி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் அம்மாவாக போகும் செய்தியை தெரிவித்து வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News