×

கொரோனா சிகிச்சை நோயாளி மருத்துவமனையிலிருந்து எஸ்கேப் - மங்களூரில் அதிர்ச்சி

சீனாவில் கடந்த அண்டு டிசம்பர் மாதம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது 25 நாடுகளில் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் 3000 பேர் இறந்துள்ளனர். 80,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பும் பயணிகளால் இந்த வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 3 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மங்களூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையிலிருந்து திடீரென மாயமாகி விட்டார். இதுபற்றி காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நபரை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரை  கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நோய் எளிதில் பரவும் என்பதால் மங்களூரில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News