×

கமலே இறங்கி வந்தாலும் லைக்கா இறங்கி வராது போல – அப்செட்டில் ஷங்கர்!

கமல் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன.

 

கமல் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன.

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. படம் பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக்கு பிறகு படப்பிடிப்பு நடக்கவே இல்லை. இதனால் இயக்குனர் ஷங்கர் பயங்கர மன உளைச்சலில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது கமலும் பிக்பாஸ் மற்றும் லோகேஷ் இயக்கும் புதிய படம் என ஒப்பந்தமாகி விட்டார். இதனால் இப்போது ஷூட்டிங் இல்லை என சொல்லப்பட்டது. ஆனால் ஷங்கரிடம் கமல் தான் ஒரு 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். நடிகர் நடிகைகள் அதிகமாக இல்லாத காட்சிகளைப் படமாக்குங்கள் என ஷங்கரிடம் சொல்ல அவரும் உற்சாகமாகியுள்ளார். ஆனால் தயாரிப்பு தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இப்போதைக்கு இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்படுவது கஷ்டம்தான் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News