Connect with us
vijay rajin

Cinema News

அந்த விஷயத்துல எப்பவுமே விஜய் தான் டாப்!! ரஜினியால கூட முந்தவே முடியாதாம்!

விஜய் படம் தான் அதிகமாக வசூல் செய்கிறது. எனவே விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறியதால் தான் இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனையே வெடித்தது. இந்த பிரச்சனை முடியவே முடியாதா என்று நினைக்கும் அளவிற்கு, இந்த பஞ்சாயத்து பெரிதாகி விட்டது. இன்று வரை சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கிடையே சண்டை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு வசூலில் விஜயை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ரஜினியாலும் இந்த விஷயத்தில் விஜயை முந்தவே முடியாது என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மற்ற நடிகர்களின் படத்தை விட, விஜய் படம் தான் அதிகமாக வசூல் செய்யும்.

இதையும் படிங்க- அஜித்தின் அடுத்த படம் ஓடிடியில்!.. படத்தின் பெயர் இதுதானாம்!.. என்னப்பா சொல்றீங்க!…

வாரிசு படம் வெளிநாடுகளுக்கு 30 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஆனால் லியோ படம் 60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. லியோ படம் மொத்தமாக 1000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பு நிறுவனம் டார்கெட் வைத்துள்ளது. ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 28 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால், சிங்கப்பூரில் லியோ படத்திற்கன ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் ஆடியோ லாஞ்ச் மதுரையில் நடைபெறவுள்ளது. அதில் விஜயும் பங்கேற்ற உள்ளார். மேலும், யார் படம் அதிகம் வசூல் செய்தாலும், ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வசூலை வைத்து யார் சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியாது. விஜய் தளபதி, ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ‘விடாமுயற்சி’யை டம்மி பீஸாக மாற்றிய ரஜினி! செம ஃபார்முலதான் இருக்காரு – பருந்துனா சும்மாவா?

author avatar
prabhanjani
Continue Reading

More in Cinema News

To Top