Categories: Cinema News latest news throwback stories

எழுந்திருக்க முடியாத நிலையிலும் அஜித் செய்த மாபெரும் செயல்! இன்னும் எத்தனைதான் இருக்கு?

Ajith: துணிவு படத்திற்கு பிரகு அஜித்தின் எந்த படமும் வெளியாகாத நிலையில் விடாமுயற்சி படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். துணிவு வாரிசு படங்களின் பலத்த போட்டியால் அடுத்தடுத்து விஜயும் அஜித்தும் தான் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படத்தின் துவக்கத்திலேயே பெரிய பாராங்கல் விழுந்தது.

ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் கிட்டத்தட்ட ஒன்றரை வருட போராட்டத்திற்கு பிறகு இப்பொழுதுதான் படப்பிடிப்பே முடிவடைந்திருக்கிறது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கவேண்டியிருக்கிறது. அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

ஒன்றரை வருடமாக படமே கொடுக்காத அஜித் டபுள் ட்ரீட்டாக அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றன. அஜித்தை பொறுத்தவரைக்கும் அவர் செய்கிற உதவி வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை. பப்ளிசிட்டி பண்ணவும் அஜித் விரும்பமாட்டார்.

இதையும் படிங்க: அஜித் வாங்கிய ஆடம்பர ரேஸ் கார்… 3 நொடியில் 100 கி.மீ. வேகம்… எத்தனை கோடி தெரியுமா…?

உதவி செய்து விட்டு இதை பற்றி வெளியே பெருமையாக பேசவேண்டாம் என்றும் அன்புக் கட்டளை போட்டு விடுவாராம். பல பிரபலங்களே அஜித் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். ஏன் சமீபத்தில் கூட பிரபல நடிகை சாந்தி வில்லிம்ஸ் அஜித் எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறார் தெரியுமா? எனக்கு அதை பற்றி முழுவதும் தெரியும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒரு ஃபைட்டரின் மகள் அஜித்தை பற்றி கூறிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. வரலாறு படத்தில் நடிக்கும் போது அந்த ஃபைட்டரின் மகள் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தாராம். உடனே அஜித் ஓகே சொல்ல ஒன்னு போதுமா என கேட்டாராம் அஜித்.

அந்த ஃபைட்டரின் மகளுக்கு காலில் ஏதோ ஆப்ரேஷன் செய்ய வேண்டியிருந்ததாம். உடனே சுற்றி இருந்தவர்கள் போய் அஜித்திடம் கேள். கண்டிப்பாக செய்வார் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் கேட்க மறுத்துவிட்டாராம். உடனே எல்லாரும் சேர்ந்து அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனிடம் விஷயத்தை சொல்ல கனல் கண்ணன் இதை அஜித்திடம் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: என்னய்யா கடைசியில் இப்படி பண்ணிட்டீங்க… ஏமாந்த விஜய் ரசிகர்கள்… தளபதி 69 படத்தின் அப்டேட்..?

மறு நாள் அஜித் படப்பிடிப்பில் ஏதோ விபத்து ஏற்பட்டு எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தாராம். அப்போது அந்த ஃபைட்டரை பார்த்து வரச் சொன்னாராம். அவரிடம் ‘உன் பொண்ணு ஆப்ரேஷன் பற்றி கேள்விப்பட்டேன்’ என சொல்லி அருகில் இருந்த அவருடைய உதவியாளரை வரவழைத்து ஒன்றரை லட்சத்திற்கான செக்கை கையெழுத்திட்டு போட்டுக் கொடுத்தாராம்.

இதை பற்றி இப்போது அந்த ஃபைட்டரின் மகள் ஒரு சேனலில் பேசியிருக்கிறார். அப்போது அவருக்கு 10 வயதாம்.இப்போது திருமணமாகிவிட்டது. இப்போது அஜித் செய்தததை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. முடியாத சூழ்நிலையிலும் ஒருவருக்கு உதவி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதை அஜித் சார் மட்டும்தான் பண்ணுவார் என அந்த ஃபைட்டரின் மகள் கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் சீன் சொதப்பல்! அதற்கான காரணத்தை கூறிய கோட் ஒளிப்பதிவாளர்

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini