×

சூரி சொல்வது எல்லாம் பொய்... விஷ்ணு விஷால் அறிக்கை

 

தமிழில் மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, ஜில்லா, வேதாளம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சூரி.

1997ம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானவர் தனது கடின உழைப்பினால் இன்று முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்திருக்கிறார். 
அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா உட்பட மூன்று பேர் மீது அவர் புகார் கூறியுள்ளார். எனவே, அவர்கள் அனைவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சூரியின் இந்த புகாரை விஷ்ணு விஷால் மறுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சி கரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும். 

வரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. 

நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News