×

ஜோதி்டர் மனைவியுடன் உல்லாசம் : தொழிலதிபருக்கு நேர்ந்த விபரீதம்
 

ஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த தொழிலபதர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன். மனைவியை பிரிந்த இவர் நண்பர் ஒருவருடன் சேலத்தில் தொழில் செய்து வந்தார். இவருக்குக்கு சேலத்தில் வசிக்கும் ஜோதிடர் இளையராஜா என்பவரின் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டது. 

இதை அறிந்த இளையராஜா இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் கள்ளக்காதலை விடவில்லை. இதனா ஆத்திரமடைந்த இளையராஜா பாலசுப்பிரமணியத்தை கொலை செய்வது என முடிவெடுத்தார்.

எனவே, தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காமனேரி எனும் இடத்தின் ஒதுக்குபுறத்தில் பாலசுப்புரமணியத்தை கொலை செய்து உடலை தூக்கி வீசினார். அதன்பின் காரில் சென்ற போது போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினர். அப்போது, போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் பேசியதால் சந்தேகத்தின் பேரில் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News