×

இனி நிறைய எதிர்பார்க்கலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்த சாக்ஷி அகர்வால்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனக்கென infloo என்ற புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் ஒர்க் செய்யும் வீடியோ , உடற்பயிற்சி டிப்ஸ், அழகு குறிப்புகள், வீடியோ கால், லைவ் வீடியோ உள்ளிட்டவரை வெளியிடப்போவதாக தெரிவித்து தன்னுடைய புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News