Categories: Bigg Boss latest news television

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்…! எப்போது தெரியுமா…?

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்பொழுது வீட்டிற்குள் வெறும் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏற்கனவே போட்டியில் கலந்துகொண்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இசைவாணி, மதுமிதா, அபிஷேக், நமிதா மாரிமுத்து, அபினை, சின்னப்பொண்ணு, நாதியா சாங், வருண், அக்ஷரா, ஐக்கி, இமான் அண்ணாச்சி தாமரை, சிபி ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் போட்டியின் இறுதியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்  பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுப்பது வழக்கம். அது போல இந்த வருடமும் விரைவில் போட்டியாளர்கள் ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Manikandan
Published by
Manikandan