சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து யார் இயக்குவார் என்று கேள்வி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. “அண்ணாத்த” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக கொடுக்க வேண்டும் என ரஜினி தரப்பு உறுதியாக இருக்கின்றதாம்.
அந்த வகையில், பெரும்பாலான இளம் இயக்குனர்களிடம் ரஜினிகாந்த் தற்போது கதை கேட்டு வருகிறாராம். அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியிடம் முதலில் ரஜினிகாந்த் கதை கேட்டு உறுதி செய்தார். ஆனால், பட்ஜெட் அதிகமாக இருந்ததால் படத்தின் அறிவிப்பு வெளி வெளியாகாமல் இருந்தது.
இதையும் படியுங்களேன்…
ரஜினியை பார்த்தாவது திருந்துங்க விஜய்.! ஆசை யாரை விட்டது.?! |
அதன் பிறகு, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் என இளம் தலைமுறை இயக்குனர்கள் ரஜினியிடம் கதை கூறி இருந்தனராம். தற்போது தேசிங்கு பெரியசாமி படத்தின் பட்ஜெட்டை குறைத்து மீண்டும் ரஜினியிடம் கூறியுள்ளாராம்.
அதே நேரத்தில் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் ரஜினிகாந்திடம் ஒரு கதை கூறியுள்ளாராம். விரைவில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதன் இயக்குனர் நெல்சன் அல்லது தேசிங்கு பெரியசாமியாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…