Categories: Cinema News latest news

பீஸ்ட் ரிலீஸ் தேதியை எப்போ தான் அறிவிக்க போறீங்க?! வெளியாகிய உண்மை தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் படம் குறித்த ஏதேனும் சிறிய அப்டேட்டாவது கிடைக்குமா என ரசிகர்கள் ஏங்கி வந்தனர். இந்நிலையில் தான் ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல, பீஸ்ட் படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அரபி குத்து என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வீடியோவின் கடைசியில், அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தான் பீஸ்ட் பட அப்டேட்கள் வெளியிட்டு வருகின்றனர். மேலும், இத்திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்து, அதற்கு சான்றிதழ் வந்த பிறகு தான் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்க சன் பிக்ச்சர்ஸ் முடிவு எடுத்துள்ளது.

ஒரு வேளை, சென்சார் சான்றிதழ் வெளியாக தாமதம் ஆகினால், ரிலீஸ் குறித்து தேதியும் வெளியாக தாமதம் ஆகும் என பேசப்படுகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்குள் சென்சார் பணிகள் முடிந்தால் உண்டு. சரி என்ன நடக்க போகுதனு பொறுத்திருந்து பார்ப்போம்.

Manikandan
Published by
Manikandan