×

என் கனவு நிறைவேறிவிட்டது... கமலுடன் நடிப்பது பற்றி நெகிழும் பஹத் பாசில்....

 
fahat fazil

மலையாளத்தில் Trance, Bangalore days, annayum Rasoolum, take off  போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது அசாத்திய நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பஹத் பாசில். தமிழில், சூப்பர் டீலக்ஸ் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த Trance படத்தை நீங்கள் பார்த்தால் ‘மனுசன் எப்படி இப்படி நடிக்கிறார்?’ என ஆச்சர்யத்தில் மூழ்கிப்போவீர்கள்.

fahat

ஆனால், அவரின் மனம் கவர்ந்த நடிகர் என்றால் அது நம்ம கமல்ஹாசன்தான். கமல்ஹாசனின் நடிப்பை பார்த்துவிட்டு பிரமித்துப்போயிருக்கிறார் பஹத் பாசில். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய் வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதியும் நடிப்பது கூடுதல் தகவல். விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகி பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. 

kamal

கமலை சந்தித்தால் அவரிடம் என்ன கேட்பீர்கள்? என பஹத் பாசிலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் ‘உங்களால் மட்டும் இவையெல்லாம் எப்படி சாத்தியம்?’ என கேட்பேன் என பதில் கூறியிருந்தார்.

இந்நிலையில், விக்ரம் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இப்படத்தில் நடிப்பது என் பாக்கியம். கமல் சாருடன் நடிப்பது என் கனவுகளில் ஒன்று தற்போது அது நிறைவேறியுள்ளது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.
 

vikam

From around the web

Trending Videos

Tamilnadu News