புஷ்பா படத்துல எனக்கு ஒன்னுமே இல்ல.. கடைசில இப்படி சொல்லிட்டாரே பகத்பாசில்?

by Rohini |
fahat
X

fahat

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு நாட்களில் படம் 200 கோடியை தாண்டி இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் முதல் பாகத்தில் கடைசி கிளைமாக்ஸில் பகத்தின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மொட்டை தலையுடன் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் இரண்டாம் பாகத்தில் அவருக்கும் அல்லு அர்ஜுனுக்குமான மோதல் தான் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் படம் பார்த்த அனைவருமே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பகத் பாசிலை டம்மி பீஸாக்கி இருக்கின்றனர் என்றுதான் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு ஏற்ற வகையில் ஒரு பேட்டியில் புஷ்பா படத்தை பற்றி அவருடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் பகத். இதோ அவர் கூறியது. புஷ்பா படத்தில் எனக்கு என ஒன்றுமே இல்லை. இதை நான் சுகுமார்கிட்டையே நிறைய தடவை சொல்லி இருக்கிறேன். அதை நான் மறுக்க வேண்டியதும் இல்லை. இதை நான் வெளியில் சொல்வதன் மூலம் யாரையும் அவமரியாதை செய்ய நினைக்கவும் இல்லை .

புஷ்பா படத்தில் மக்கள் என்னிடமிருந்து மேஜிக்கை எதிர்பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த படத்தில் நான் சுகுமாருக்காக மட்டும்தான் அவர் மீதுள்ள அன்பினால் மட்டும்தான் நடித்தேன். அதில் எனது விஷயங்கள் தெளிவாக உள்ளன. அவ்வளவுதான் என கூறி இருக்கிறார் பகத்.

பகத் பாசிலை பொறுத்தவரைக்கும் மலையாளத்தை விட தமிழில் தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் விக்ரம் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அதனை அடுத்து மாமன்னன் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் பகத் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story