×

உன் காலில் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து வெளியே போகாதே! லாரன்ஸ்...

தற்போது கொரோனாவால் நிலவும் சூழ்நிலை பற்றி பல்வேறு பிரபலங்களும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதுபோல நடிகர் ராகவா லாரன்ஸும் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
 

"இப்போது நம் எல்லோர் மனதிலில் இருக்கும் ஒரு விஷயம், சீக்கிரம்
கொரோனா நம்மை விட்டு போக வேண்டும் என்பது தான். அதற்கு ஒரே வழி தான் இருக்கு.. நாம் வீட்டை விட்டு வெளியே போக கூடாது. அரசு சொல்வதை கேட்டு நடங்க."

"இப்படித்தான் இத்தாலியில் அரசு சொல்வதை கேட்காமல் மக்கள் இருந்தனர். இப்போது அவர்கள் நிலைமை என்ன தெரியுமா. பிணத்தை புதைக்க கூட இடம் இல்லாமல் அழுதுகொண்டிருக்கிறார்கள் அனைவரும். அந்த நிலைமை நமக்கும் வந்துவிட கூடாது. தயவு செய்து யாரும் வெளியே போகாதீங்க" என கேட்டுக்கொண்டார் லாரன்ஸ்.

அப்போது அந்த வழியாக வெளியில் சென்ற ஒருவரை கூப்பிட்டு பேசுகிறார் லாரன்ஸ். அப்போது அவர் தனக்கு 20 நாள் லீவு கொடுத்திருக்கிறார்கள் அதனால் அப்பா அம்மாவை பார்க்க வீட்டிற்கு செல்கிறேன் என கூறுகிறார்.

"இது என்ன பொங்கல் தீபாவளினு நெனச்சிட்டியா. அப்பா அம்மா கூட சந்தோசமா இருக்க போறேன்னு தானே சொன்ன.. அவங்கள சாவடிக்க போற நீ."

"நீ போய் பஸ்ல உட்காருவ. அங்க யாருக்காவது கொரோனா இருந்தால் உனக்கு தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு நீ உன் அப்பா அம்மாவை கட்டி பிடித்தால் அது அவர்களுக்கும் பரவும். அதனால நீ வீட்டுக்கு போக வேணாம். இதெல்லாம் முடிஞ்சபிறகு எவ்ளோ வேணும்னாலும் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம்."

"உன் காலில் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து வெளியே போகாதே" என கூறியுள்ளார் லாரன்ஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News