×

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி.. காதலன் செய்த வெறிச்செயல்....

ஹைதாராபாத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் தங்கை பிரியங்கா(34). இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.சென்னை மாதவரம் பகுதில் நாய் பண்ணை நடத்தி வந்த காட்வின் டொமினிக் என்பவரிடம் வேலை செய்து வந்துள்ளார். 
 

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பிரியங்காவிடமிருந்து செல்போன் அழைப்பு வரவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி அவரது அண்ணன் விக்ரம், ஆன்லைன் மூலமாக திருவள்ளூர் மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, போலீசார் பிரியங்காவை தேடிவந்தனர்.

இதற்கிடையே ஒரு சிறுவன் கொடுத்த தகவலின் படி காப்பு காட்டு பகுதியில்  பிரியங்காவின் சடலத்தை போலீசார் மீட்டனர். அதன்பின் மெர்லினை பிடித்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மெரிலினின் பண்ணைக்கு அருகே வசிக்கும் விஜய் ஆனந்த் என்பவருக்கும், பிரியங்காவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த மாதம் பிரியங்கா விஜய் ஆனந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜய் ஆனந்த் அவரை படுக்கைக்கு அழைத்துள்ளார். ஆனால், பிரியங்கா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ஆனந்த் அவரை அங்கிருந்த நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார்.இதில், அவர் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

எனவே, விஜய் ஆனந்த், மெர்லின் மற்றும் நாயர் ஆகியோர் ர்ந்து பண்ணை அருகே குழி தோண்டி பிரியங்காவின் உடலை புதைத்துவிட்டோம் என மெரிலின் வாக்குமூலம் அளித்தார். எனவே, போலீசார் மெர்லினை கைது செய்தனர். தலைமறைவான விஜய் ஆனந்த் மற்றும் நாயரை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News