×

நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்.... சுற்றிவளைத்து வெட்டிய 6 பேர்....

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள சேர்மாநல்லூர் பகுதியில் வசிப்பவர் ராஜா(28). இவர் கடந்த 21ம் தேதி தனது நண்பர் சதீஷுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 
 

அப்போது, அவருக்கு பின்னால் வந்த சிலர் மோட்டார் சைக்கிளை எட்டு உதைத்தனர். இதில் நிலை தடுமாறி ராஜாவும், சதீஷும் கீழே விழுந்தனர். அதன்பின் சுதாரித்து இருவரும் எழுந்து ஓடினர். அவர்களை விரட்டி சென்ற அவர்கள் சித்தமல்லி பகுதியில் உள்ள வயலில் ராஜாவை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். அதை தடுக்க முயன்ற சதீஷுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராஜா தனது நண்பர் ஒருவரின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதை கைவிடுமாறு நண்பர்கள் கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும், கைதான 6 பேரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்கும் ராஜா இடையூறாக இருந்துள்ளார்.

எனவே, அவரை கொலை செய்வது என முடிவெடுத்து அந்த 6 பேரும் அவரை பின் தொடர்ந்து அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News