×

தமிழ்சினிமாவிற்கு தலைப்புகளுக்கா பஞ்சம்....? வாயில் வந்ததெல்லாம் தலைப்புகள் தான்...

 
ira

தமிழ்சினிமாவில் தற்போது தலைப்புக்குப் பஞ்சம் வந்து விட்டது. எந்தத் தலைப்பை வைப்பது என்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லாம் தலைப்பு வைக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு காலத்தில் படத்தலைப்பே கதையை சொல்லும் கருவியாக விளங்கியது. அதுவும் தூய தமிழில் இருந்தது. தற்போது சினிமாவில் கதையும் இல்லை.

ஒன்லைன் ஸ்டோரி என்கிறார்கள். ஆனால் அதுவும் அரைத்த மாவையே அரைத்த கதையாகத்தான் உள்ளது. அது இருக்கட்டும். டைட்டிலாவது கொஞ்சம் யோசித்து வைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. வாயில் வந்ததெல்லாம் தலைப்பாக மாறிப்போனது. படத்தைப் போய் பார்க்கலாம் என்றால் அதுவும் ஒருநாள் தான் ஓடுகிறது. மறுநாள் தூக்கி விடுகிறார்கள். அப்படிப்பட்ட படங்கள் தான் ஏகப்பட்டவை வந்துள்ளன. 

உதாரணமாக, யோக்கியன் வாரான் சொம்பத் தூக்கி உள்ளே வை, தமிழ்ப்படம், என் ஆளோட செருப்பக் காணோம், நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், போங்கடி நீங்களும் உங்க காதலும், அண்டாவ காணோம், நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, ஏண்டா தலையில எண்ண வெக்கல, விஷயம் வெளிய தெரியக்கூடாது, நாளை முதல் குடிக்க மாட்டேன், சங்கிலி புங்கிலி கதவ தொற, சக்க போடு போடு ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,

தில்லுக்கு துட்டு, மண்டேலா, மஞ்ச சட்ட பச்ச சட்ட, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, பூம் பூம் காளை, பேய் இருக்க பயமேன், ஒரு பக்க கதை, ஒரு குப்பை கதை, மங்குனி பாண்டியர்கள், கேடி (எ) கருப்பு துரை, பட்லர் பாலு, பப்பி, சூப்பர் டூப்பர், 100 சதவீத காதல், அக்யூஸ்ட் நம்பர் 1, திருவாளர் பஞ்சாங்கம், நாங்க ரொம்ப பிசி, இரண்டாம் குத்து, தனுசு ராசி நேயர்களே, திட்டம் போட்டு திருடுற கூட்டம், புலி அடிச்சான் பட்டி. மேற்கண்ட படங்களில் பெரும்பாலானவை காமெடிப் படங்கள் தான். சில காமெடி பேய் படங்கள். ஆனால், படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை என்கிற கதையாகத்தான் உள்ளது. 

மேற்கண்டவற்றில் தமிழ்ப்படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் தவிர மற்றவை எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம். 

அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம். 

யோக்கியன் வாரான் சொம்ப தூக்கி உள்ள வை

yoll

யோக்கியன் வாரான் சொம்ப தூக்கி உள்ள வை என்ற நகைச்சுவையான பேச்சு வழக்கு டயலாக்கையே படத்தின் தலைப்பாக வைத்து விட்டார்கள். படத்தின் இயக்குனர் சுவாமி ராஜா. 2016ல் வெளியான இந்தப் படத்தில் சிங்கம்புலி தான் பிரதான காமெடியன். அவர் தான் சொம்பு திருடன். வடக்குப்பட்டி, தெற்குப்பட்டி என 2 கிராமங்கள். இரு பஞ்சாயத்துகளுக்கும் பெரிய பகை. இரு கிராமங்களைச் சேர்ந்த காதல் ஜோடியை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் சொம்பு திருடன் சிங்கம்புலி. அவரது முயற்சி பலித்;ததா என்பதை வெண்திரையில் காணலாம். படத்தைப் பார்க்க தனியாக தைரியம் வேண்டும். அவ்வளவு மொக்கை படம் இது. 

ஒரு குப்பை கதை 

okpo

பிலிம் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் காளி ரங்கசாமியின் இயக்கத்தில் 2018ல் வெளியான படம் ஒரு குப்பை கதை. தினேஷ், மனிஷா யாதவ் மற்றும் பலர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்தார். 

ஒரு நல்ல படத்தைக் கொடுக்கும் முயற்சிக்கும் இயக்குனர் தன் முதல் படத்திற்கு ஒரு குப்பைக் கதை என பெயர் வைப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். தமிழ்சினிமாவில் குப்பை அள்ளும் இளைஞன் ஹீரோ என்றால் யார் தான் நடிக்க முன்வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு அபூர்வமான கதைதான் இது.  இயக்குனருக்கு அதற்காகவே பாராட்டுகளை சொல்லியாக வேண்டும். மன்னிப்பதை விட பெரிய தண்டனை எதுவும் இல்லை என்பதைக் கதைக்கருவாக எடுத்து படத்தை வெளியிட்டுள்ளனர். கதை தான் ஒரு குப்பை கதையே தவிர அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

பேய் இருக்க பயமேன் 

pei

2021 புத்தாண்;டுக்கு வெளியான திகில் கலந்த நகைச்சுவைப் படம். எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தீஸ்வரன், காயத்ரி ரேமா, எம்.ஆர்.அர்ஜூன், நியாதி, அபிராம், முத்துக்காளை, நெல்லை சிவா, கோதை சந்தானம்  ஆகியோர் முன்னனி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கேரள தமிழக எல்லையில் படமாக்கப்பட்டது. மறையூர் அருகே ஒரு பெரிய வீட்டில் படப்படிப்பு நடத்தப்பட்டது. 

இரண்டாம் குத்து

படத்தில் அடல்ட் காமெடி என்ற பெயரில் முகம் சுழிக்க வைக்கும் வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். சந்தோஷ_ம், டேனியலும் காமெடி செய்ய முயன்ற வசனங்கள் காம நெடியைத் தான் வீசுகின்றன. இதுபோன்ற ஆபாச குப்பைகளை நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ். இவர் இதற்கு முன் எடுத்த முதல் பாகமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டைட்டிலை பார்த்தவர்கள் தான் இப்படத்தின் ரசிகர்கள். இதில் வேறு 3ம் பாகமும் வரும் என காட்டுகிறார்கள். 

தனுசு ராசி நேயர்களே 

than

இப்படத்தின் இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான் நடித்த காதல் கலந்த காமெடி படம்.  கோகுலம் கோபாலன் தயாரிக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் சஞ்சய் பாரதி, இயக்குனர் சந்தான பாரதியின் மகன். படத்தில் நகைச்சுவை கலந்த திரைக்கதை இருப்பதால் கொஞ்சம் ரசிக்கலாம்.    


  

From around the web

Trending Videos

Tamilnadu News