×

பிரபல நடிகர் மற்றும் கதாசிரியர் புற்றுநோயால் மரணம்...
 

 

தமிழ் சினிமாவில் கதாசிரியராக இருந்தவர் ரூபன். மேலும், தில், தூள், கில்லி உள்ளிட்ட  பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.  மேலும், பல திரைப்படங்களுக்கு கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். அதோடு, ராதிகா நடித்த அண்ணாமலை சீரியலிலும்  நடித்துள்ளார்.

இவருக்கு வயது 54. இவருக்கு சங்கீதா என்கிற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.

இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூபன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு கொரொனா தொற்று  உறுதியானது. 

இந்நிலையில், நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News