Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயன் கேரியருக்கு ஆப்பு வைக்க நினைத்த பிரபல சினிமா குடும்பம்… இவங்களா இப்படி பண்ணது?

சின்னத்திரை மூலமாக வெள்ளித் திரைக்கு வந்து ரசிகர்களின் மத்தியில் ஒரு சிறந்த என்டெர்டெயினராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிக ஆச்சரியத்தக்கதும் கூட.

தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என்று பெயர் எடுத்த சிவகார்த்திகேயன், பேமிலி ஆடியன்ஸுக்கு மிகப் பிடித்த நடிகராக திகழ்ந்து வருகிறார். விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் போட்டி போடும் வகையில் தற்போது இவரின் மார்க்கெட் லெவல் இருப்பதாக பல சினிமா பிரபலங்கள் கூறிவருகின்றனர்.

Sivakarthikeyan and Dhanush

சிவகார்த்திகேயன் தொடர்க்கத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றி வந்தார். ஆனால் ஒரு காலகட்டத்தில் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக பல தகவல்கள் வெளிவந்தன. மேலும் அதன் பின் தனுஷுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பணியாற்றவே இல்லை.

மேலும் “ரெமோ” திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “எங்களை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள்” என மேடையிலேயே அழுதார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டு செய்தது.

Sivakarthikeyan

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சிவகார்த்திகேயன் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Cheyyaru Balu

அதாவது “சினிமாவில் ஒருவர் எந்த பின்னணியும் இல்லாமல் வளர்கிறார் என்றால் அவரின் வளர்ச்சியை தடுப்பதற்காக அவரை எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்குவார்கள். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் ஒரு சினிமா குடும்பம் சிவகார்த்திகேயனுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று கோலிவுட்டில் இன்றைக்கும் பல பேச்சுகள் உண்டு. அது யார், எந்த குடும்பம் என்று பலருக்கும் தெரியும்” என கூறியுள்ளார்.

Surya

செய்யாறு பாலு இவ்வாறு பேட்டியளித்த வீடியோவின் கம்மென்ட் பகுதியில் பார்வையாளர்கள் பலரும் சூர்யா குடும்பம்தான் சிவகார்த்திகேயனுக்கு எதிராக செயல்பட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.

Arun Prasad
Published by
Arun Prasad