Categories: Cinema News latest news

வெற்றிமாறனை கட்டம் கட்டி பழிவாங்கிய நடிகர்… இருவருக்கும் நடுவுல இப்படி ஒரு வெறுப்பு இருக்கா?..

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுவரை நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்பட்ட சூரி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். சூரியின் நடிப்பு அசத்தலாக இருப்பதாக பல ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

வெற்றிமாறன் தொடக்கத்தில் கதிர், பாலு மகேந்திரா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பிரபல நடிகரை ஒரு படத்தில் நடிக்க விடாமல் செய்தாராம். அந்த நடிகர் பின்னாளில் வெற்றிமாறனை பழிவாங்கியுள்ளார். அது என்ன சம்பவம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

வெற்றிமாறன் கூறிய கதை

பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், ஒரு பிரபல நடிகரிடம் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். அந்த நடிகர் நடிக்க வேண்டிய திரைப்படத்திற்கான கதைகளை எல்லாம் கேட்கும் பொறுப்பில் இருந்தாராம். அந்த சமயத்தில் வெற்றிமாறன் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தாராம்.

அப்போது அந்த பிரபல நடிகருக்காக ஒரு கதை எழுதி வைத்திருப்பதாக அந்தணனை அணுகியிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறன் கூறிய கதை, அந்தணனுக்கு பிடித்துப்போயிருக்கிறது. அதன் பின் அந்தணன், அந்த பிரபல நடிகரிடம், “வெற்றிமாறன் என்று ஒருவர் கதை சொல்லியிருந்தார். அந்த கதை அருமையாக இருக்கிறது. நீங்கள் அந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும்” என கூறினாராம்.

என்னை நடிக்க விடாமல் செய்தார்..

இதனை கேட்டுக்கொண்டிருந்த அந்த பிரபல நடிகர், “வெற்றிமாறனா? அவர் இயக்குனர் கதிரிடம் பணியாற்றினாரா?” என கேட்டிருக்கிறார். அதற்கு அந்தணன், “ஆமாம், கதிர், பாலு மகேந்திரா ஆகியோருடன் பணியாற்றியிருக்கிறார்” என கூற, உடனே அந்த நடிகர், “அவரை எனக்கு நன்றாக தெரியும். மிகச் சிறந்த திறமைசாலி. ஆனால் நான் அவர் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன்” என கூறியிருக்கிறார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த அந்தணன், “ஏன் சார் இப்படி சொல்றீங்க?” என கேட்க, அதற்கு அந்த நடிகர், “நான் ஒரு முறை இயக்குனர் கதிர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால் அப்போது அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்த வெற்றிமாறன் என்னை பற்றி குறை கூறி அந்த படத்தில் என்னை நடிக்கவிடாமல் செய்துவிட்டார். ஆதலால் நான் அவரது படத்தில் நடிக்க மாட்டேன்” என கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்ட அந்தணன், அந்த நடிகர் யார் என்பதை கூறவில்லை. எனினும் பத்திரிக்கையாளர் அந்தணன், நடிகர் ஸ்ரீகாந்துக்கு நெருக்கமான நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெற்றிமாறனுக்கு இப்படி ஒரு குணம் இருக்கா?… சத்தியமா இதை நினைச்சிக்கூட பார்த்துருக்க மாட்டீங்க!

Arun Prasad
Published by
Arun Prasad