Rajinikanth: கோலிவுட்டில் ரஜினிகாந்தின் கேரியர் உயர்ந்துக் கொண்டு இருந்த சமயம் அவரை வைத்து ஒரு படத்தினை தயாரிக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார் இளையராஜா. ஆனால் அப்படத்தில் ஒரு குழப்பமே நடந்து தான் படம் ரிலீஸுக்கு வந்ததாம்.
முதலில் இளையராஜா ரஜினியிடம் இப்படி ஒரு படத்தினை தயாரிக்க போவதாகவும், அதில் நீங்க நடிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். ரஜினிக்கும் இளையராஜாவுக்கு அப்போது நெருங்கி நட்பு இருந்ததால் கதை எதையுமே கேட்காமல் ஓகே சொல்லிவிட்டார்.
இதையும் படிங்க: ரஜினி மாறு வேஷத்தில் போய் பார்த்த சூர்யா படம்!.. என்ன சொன்னார் தெரியுமா?…
ஆனால் அப்போது இருந்த ஒரு புதுமுக இயக்குனர் ஒரு கதை கூறி அப்படத்துக்கு ராஜாதி ராஜா என்ற டைட்டிலை சொல்லி இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அந்த இயக்குனர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். ஆனால் இளையராஜாவுக்கு டைட்டில் பிடித்து போக அதை வைத்தே ஒரு இயக்குனரை தேடி இருக்கிறார்.
அப்போது இயக்குனராக பிசியாக இருந்த ஆர்.சுந்தராஜன் இளையராஜாவிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன் முதலில் ரஜினிகாந்தை வைத்து அம்மன் கோவில் கிழக்காலே படத்தை இயக்க திட்டமிட்டாராம். அது நடக்காமல் போனது.
இளையராஜாவுக்கு சுந்தர்ராஜன் சொன்ன கதை பிடித்து விட்டது. தொடர்ந்து, எஸ்.பி.முத்துராமன் மற்றும் ரஜினிகாந்திடம் இந்த கதையை சொல்ல அனுப்பினாராம். இருவருக்குமே கதை ரொம்பவே பிடித்து விட்டதாம். ஆனால் ஏற்கனவே ரஜினியை இயக்க முடியாமல் போனதால் சுந்தர்ராஜன் அப்படத்தினை இயக்க தயங்கினாராம்.
இதையும் படிங்க: தப்பா பேசிய பப்லு… ஆனால் அவருக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.. மாஸ் தல நீங்க..!
ஆனால் ரஜினிகாந்த் படத்தை இயக்க சுந்தர்ராஜனை வற்புறுத்தினாராம். பஞ்சு அருணாச்சலம் இப்படத்துக்கு திரைக்கதை எழுதினார். இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கரின் கீழ் பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா இசையமைப்பில் இப்படம் திரைக்கு வந்தது. கமர்ஷியல் ஹிட்டாக அமைந்த இப்படம் தற்போது வரை ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆர்.சுந்தர்ராஜன் நிறைய படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்து இருக்கிறார். தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரில் அண்ணாமலை கேரக்டரில் நடித்தும் வருகிறார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…