ரியல் லைஃப்ல கமலும் இப்படித்தான்.. ஏன் ‘விடாமுயற்சி’ பிடிக்கலனு தெரியல! கரெக்ட்தான்

by Rohini |   ( Updated:2025-02-11 01:30:48  )
kamal
X

பிரபல திரைவிமர்சகர் விஷால் விடாமுயற்சி படம் ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை. அது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது என கூறி மேலும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். இதோ அவர் கூறியது: ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த படத்தில் காட்டி இருக்கிறார் அஜித். அப்புறம் ஏன் அது உங்களுக்கு பிடிக்காமல் போனது. அதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய மனைவி வேறு யாருடனாவது ஈர்ப்பில் இருக்கிறார் என்றாலும் அதை எப்படி ஹேண்டில் பண்ணனும் என்பதை சரியாக செய்திருக்கிறார் அஜித். அதாவது திரிஷாவின் கேரக்டரை பொறுத்த வரைக்கும் அவருடைய கணவரை ஏமாற்றவில்லை. அவர் மீது பழி போடவில்லை. நடந்ததை எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.

இதற்கு நேர் எதிராக இன்னொருவருடன் பழக்கம் வைத்து தன் கணவர் மீது பழி சுமத்தினால் அந்த மனைவி மீது கோபப்படலாம். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை. திரிஷா நேராக வந்து சொல்கிறார். அப்படி இருக்கும் பொழுது அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்போ அந்த இடத்தை நோக்கி நகருங்கள் என்று சொன்னால் ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே பல படங்களில் முதலிரவுக்கு முன்னாடியே இறந்து போன கணவன். அப்படியான படங்களை பார்த்து பழகிட்டோம்.


அந்த வகையில் பார்க்கும்பொழுது கமல் ஒன்னு செய்வார். கௌதம் மேனன் படங்களில் இந்த மாதிரி நடக்கும். அதிலும் கமல் தான் இருந்தார். இன்னொரு படத்தில் அஜித் இருந்திருக்கிறார். மீண்டும் அஜித் இந்த மாதிரியான ஒரு படம் பண்ணியிருக்கிறார். இது இன்னொரு அடுத்த கட்டம். இன்னொருவர் மீது பழக்கம் இருக்கு என்று தெரிந்தும் தன் மனைவியை நேசிக்கிற அல்லது அந்த விஷயத்தை புரிந்து கொள்கிற கணவராக இதில் நடித்திருக்கிறார். இப்படித்தான் இருக்க வேண்டும்.

யாரும் யாரையும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்க முடியாது. உதாரணமாக இன்று நாம் இருந்த மாதிரி ஒரு பத்து வருடம் கழித்து எப்படி இருக்க முடியும். அன்றைக்கு எனக்கு பிடித்திருந்தது. ஆனால் இன்று பிடிக்கவில்லை. அது ஏன். அதை நாம் கடந்து போக தான் வேண்டும். இதில் சமூகம் மரியாதை மானம் ஒரு வெங்காயமும் கிடையாது .கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அப்படின்னு எதுவுமே கிடையாது .அதெல்லாம் பழைய கதை. இந்த மாதிரி விஷயங்களுக்கு நாம் மரியாதை கொடுக்கத்தான் வேண்டும்.

இதை நிஜத்திலும் செய்தவர் கமல். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சில பேர் மீது அவர் நெருக்கமாக இருந்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் அதைப்பற்றியோ அல்லது அந்த ரிலேஷன்சிப்பை பற்றியோ அந்த பெண்களை பற்றி தவறாகவோ கமல் வெளியில் சொன்னதே கிடையாது. அதுதான். நீங்கள் உள்ளுக்குள் எவ்வளவு வேண்டுமென்றாலும் சண்டை போடுங்கள். என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் .பொதுவெளியில் வந்து அசிங்கப்படுத்தனும்னு ஒன்னு இருக்கு .இல்லையா? அது கிடையாது.


ஆனால் இன்று பலபேர் அப்படித்தான் இருக்கிறார்கள். உண்மையான டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து நீதிமன்றத்தை தேடி போகிற கதை வேறு. அதை நாம் ஒப்பிட்டு பார்க்க கூடாது. அதை விட்டு இவளை நான் பழிவாங்க வேண்டும். இவளை நான் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வெளியில் வந்து பேசக்கூடிய ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அப்படி எல்லாம் இருக்கும்போது ஒரு மனிதன் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்று பாருங்கள் .அதுதான் கமல் சாரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம். ஒரு வேளை நான் கமல் சாரின் படங்களை பார்த்து பழகி வந்ததனால் கூட விடாமுயற்சி படம் எனக்கு பிடித்திருக்கலாம் என விஷான் கூறியிருக்கிறார்.

Next Story