×

சதுரங்க வேட்டை மோசடியில் ஈடுபட்ட கோலிவுட் இசையமைப்பாளர்... பரபரப்பில் திரையுலகம்

கோலிவுட்டில் இசையமைப்பாளராக இருக்கும் அம்ரிஷ் கைது செய்யப்பட்டு இருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. 
 
சதுரங்க வேட்டை மோசடியில் ஈடுபட்ட கோலிவுட் இசையமைப்பாளர்... பரபரப்பில் திரையுலகம்

பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ். மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இவர் தற்போது 5 வருடத்திற்கு முன்னர் செய்த இரிடியம் மோசடி வழக்கில் கைதாகி இருக்கிறார். இதுகுறித்து வெளியான தகவலின் படி, அம்ரிஷ் நடிக்க அவரது தாயும், நடிகையுமான ஜெயசித்ரா இயக்கிய படம் ‘நானே என்னுள் இல்லை’. இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் ஒரு வீட்டில் நடைபெற்று இருக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளரான நெடுமாறனுக்கும் அம்ரிஷுக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

நெடுமாறனுடன் நெருங்கிய பழகிய அம்ரிஷ் கடனாக சுமார் 26 கோடி வரை வாங்கி இருக்கிறார். தொடர்ந்து, தன்னிடம் இரிடியம் இருக்கிறது. அதை விற்கு கடனை தருகிறேன் எனக் கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து, நெடுமாறனுக்கு சில லட்சம் கடனை மட்டும் அம்ரிஷ் அடைத்து இருக்கிறார். ஆனால், அதன் பின்னர் நெடுமாறனால் பணத்தை வாங்க இயலவில்லை. இதனால், இந்த பிரச்சனையை காவல்துறை கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார்.

ஆனால், மகனை காப்பாற்ற ஜெயசித்ரா எதுவும் செய்வார் என்பதால் வழக்கு தேர்தல் அறிவிப்பு பின்னரே வேகமெடுத்தது. இதையடுத்தே, அம்ரிஷ் இன்று கைதாகி இருக்கிறார். பிரபல சினிமா குடும்பத்தின் வாரிசு மோசடி வழக்கில் கைதாகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சதுரங்க வேட்டை படத்தில் இந்த மோசடி குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே நெடுமாறன் ஏமாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News