Categories: Cinema News latest news throwback stories

கங்கை அமரனை எல்லோர் முன்னும் அவமானப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்… அடப்பாவமே!!

கங்கை அமரன், தனது சகோதரரான இளையராஜாவின் இசை பயணத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். இளையராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் அவருக்கு உற்றத்துணையாக இருந்தவர் கங்கை அமரன் என்று கூட சொல்லாம்.

Gangai Amaran

இளையராஜா எந்தளவுக்கு பிரபலமான பாடல்களை இசை உலகிற்கு கொடுத்திருக்கிறாரோ அதே அளவுக்கான பாடல்களை கங்கை அமரனும் கொடுத்திருக்கிறார். “சுவரில்லா சித்திரங்கள்”, “வாழ்வே மாயம்”, “சட்டம்” ஆகிய பல திரைப்படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார்.

இவர் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு தேவராஜ் என்ற இசையமைப்பாளரிடம் கிதார் வாசித்துக்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு காட்சிக்கேற்ப கங்கை அமரனை வாசிக்கச் சொல்லியிருக்கிறார் தேவராஜ்.

Gangai Amaran

அப்போது கங்கை அமரன் வாசிக்க, தேவராஜ்ஜுக்கு அவர் வாசித்தது திருப்தியாக இல்லையாம். மீண்டும் மீண்டும் வாசிக்க சொன்னாராம். இவ்வாறு 3 டேக்குகள் வாசித்தும் அவருக்கு திருப்தி இல்லையாம். கங்கை அமரன் சரியாக வாசிக்காததால் அங்கிருந்த மற்ற இசையமைப்பாளர்களும் வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆதலால் தேவராஜ், “கொஞ்சம் சரியா வாசிப்பா. நாங்கெல்லாம் இன்னைக்கு வீட்டுக்கு போக வேண்டாமா?” என கூறி எல்லோர் முன்னிலும் அவரை அவமானப்படுத்தினாராம். அதன் பின் 4 ஆவது டேக்கில் மிகச் சரியாக வாசித்தாராம் கங்கை அமரன்.

இதையும் படிங்க: ரஜினியின் மாஸ் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ்… காரணம் என்ன தெரியுமா?..

Gangai Amaran and Ilaiyaraaja

கங்கை அமரன் மட்டுமல்லாது இசைஞானி இளையராஜாவும் தேவராஜ்ஜிடம் பணியாற்றியிருக்கிறாராம். மேலும் கங்கை அமரனை போல இளையராஜாவும் தேவராஜ்ஜிடம் பல முறை நன்றாக திட்டு வாங்கியிருக்கிறாராம்.

Published by
Arun Prasad