Karthik and Ragini
நவரச நாயகன் என்று புகழப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “நினைவெல்லாம் நித்யா”, “ஆகாய கங்கை” போன்ற பல திரைப்படங்களில் நடித்த கார்த்திக், அக்கால இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார்.
அவரது பாடிலேங்குவேஜ்ஜும் வசனம் பேசும் ஸ்டைலும் ரசிகர்கள் பலரை கவர்ந்திழுத்தது. மேலும் அக்காலகட்டத்தில் கார்த்திக் தமிழ் சினிமாவின் “பிளே பாய்” ஆக திகழ்ந்தார் என சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் கூறுவார்கள். அந்த அளவுக்கு நடிகைகள் பலரும் அவரது அழகுக்கு மயங்கிப்போனார்களாம்.
Karthik
அப்படிப்பட்ட தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்த கார்த்தி ராகினி என்ற நடிகையை 1988 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்துகொண்ட அந்த சம்பவம் குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பாளரான தமிழ்மணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கார்த்திக்கும் ராகினியும் இணைந்து நடித்த “சோலைக்குயில்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ஒரு நடனப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் கார்த்திக், ராகினியை முதன் முதலில் பார்த்தாராம். பார்த்தவுடனே கார்த்திக்கிற்கு காதல் மலர்ந்துவிட்டதாம்.
Solaikuyil
கார்த்திக் முதலில் 10 நிமிடம்தான் நடனப்பயிற்சியில் இருப்பேன், அதன்பின் கிளம்பிவிடுவேன் என கூறினாராம். ஆனால் ராகினியை பார்த்தவுடன் அன்று முழுவதும் அங்கே இருப்பதாக முடிவெடுத்தாராம். ராகினியை பார்த்தவுடன் காதலில் விழுந்துவிட்டாராம் கார்த்திக். ஆனால் தயாரிப்பாளர் தமிழ்மணியோ, கார்த்திக் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அந்த படத்தின் ஹீரோயினை காதலிப்பார், அது போல்தான் இதுவும் என நினைத்துக்கொண்டாராம்.
இதனை தொடர்ந்து கோத்தகிரியில் “சோலைக்குயில்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது இருவரும் அருகருகே இருக்கும் அறையில் தங்கினார்களாம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். அதன் பின் ஒரு தனி விருந்தினர் மாளிகையில் கார்த்திக் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த விருந்தினர் மாளிகையில் தன்னுடன் ராகினியையும் தங்கவைக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டாராம் கார்த்திக். கார்த்திக் படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்தால் போதும் என்ற மனநிலையில் தயாரிப்பாளரும் ராகினியை கார்த்திக்குடன் தங்கவைத்தாராம்.
இதையும் படிங்க: “உதயநிதி நடிக்காமல் போனது கமல்ஹாசனுக்கு நிம்மதிதான்!!”… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது??
Karthik and Ragini
அதன் பின் ஒரு நாள் கோத்தகிரியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்க ராகினி பட்டுப்புடவையுடனும், கார்த்திக் வேஷ்டி சட்டையுடனும் வந்தார்களாம். இதனை பார்த்த தயாரிப்பாளர் தமிழ்மணி, கோயிலுக்கு வருவதால் இவ்வாறு உடை அணிந்து வருகிறார்கள் என நினைத்தாராம். அப்போது அவர்கள் ஒரு பெரிய பூப்பந்தை அம்மனுக்கு முன் வைத்து தரிசித்தார்களாம்.
அந்த பூக்களை வெட்டி அங்குள்ளவர்களுக்கு தரலாம் என தமிழ்மணி கூறியபோது ராகினி “இல்லை, இது நாங்கள் தங்கியிருக்கும் அறையில் உள்ள பூஜை அறையில் வைக்கவேண்டும்” என கூறி எடுத்துச்சென்றுவிட்டனராம். அந்த பூப்பந்திற்குள் தாலியை ஒளித்துவைத்திருக்கிறார்கள். அது யார் கண்களுக்கும் தெரியவில்லை. யாருமே அறியாதவாறு அந்த தாலியை அம்மன் முன் வைத்து ஆசீர்வாதம் வாங்கி சென்றிருக்கிறார்கள். அந்த தாலியை பூஜை அறையில் வைத்து ராகினியின் கழுத்தில் கட்டி யாருக்கும் தெரியாமல் திருமணத்தை முடித்திருக்கிறார் கார்த்திக். இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகுதான் இருவருக்கும் திருமணம் ஆன விஷயம் மற்றவர்களுக்குத் தெரியவந்ததாம்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…