×

காதலரை அறிவித்த பிரபல தமிழ் ஹீரோயின்!

ஹிந்தியில் பிரபல நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர் ஈஷா குப்தா. ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரீட்சையமாகியுள்ளார்.

 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று ஸ்பானிஷ் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஷா குப்தா தனது நீண்ட நாளாக மேனுவல் கேம்போஸ் கௌலர் என்ற தொழிலதிபரை காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

te amo mucho mi amor ♥️

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

From around the web

Trending Videos

Tamilnadu News