ஜான்வி கபூரிடம் அத்துமீறிய ரசிகர் - அலேக்கா தூக்கிய ராம்சரண் BD!
ராம் சரணின் பெத்தி:
தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் நடிகர் ராம் சரண். ராம்சரண் நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்கில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் தான் பெத்தி. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.
அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றம் ஏற்று நடித்திருக்கிறார். [இப்படத்தில் ஐட்டம் ஒன்றிற்கு ஸ்ருதி ஹாசன் நடனமாடும் வீடியோ மிகப்பெரிய அளவில் பேசப்படக்கூடியதாக பார்க்கப்படுகிறது. ஸ்ருதிஹாசனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருப்பதாக திரைப்படத்தை பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் .
அத்துமீறிய ரசிகர்:
இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூரிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி செயல்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அப்போது நடிகர் ராம் சரணின் பாடிகார்ட் ஜான்வி கபூரை நோக்கி பாய்ந்து வந்த ரசிகரை அலேக்காக தூக்கி அப்புறப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
https://www.instagram.com/reel/DZFMeBVPjgU/?igsh=eTkwOGRvNTU2cDEy
