Connect with us
farina

Cinema News

ரசிகர்களிடம் கோபமாக பேசிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை…. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்….!

சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடிகை பரீனா நடித்து வருகிறார். சீரியலில் இவரின் கேரக்டரை பார்த்தாலே ஓங்கி அறைய வேண்டும் என பார்க்கும் அனைவருக்கும் தோன்றும் அளவிற்கு வில்லத்தனத்தில் பிண்ணி பெடலெடுத்து வருகிறார் பரீனா.

farina

farina

இவருக்கு சமீபத்தில் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் நடிக்க வந்த பரீனா தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் பரீனா அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பரினா ஒரு பாடலுக்கு ரியாக்சன் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உங்கள் குழந்தையுடன் இருங்கள் என்று கமெண்ட் செய்தார். அதற்கு ரிப்ளே செய்த பரீனா, “நீங்கள் வருத்தப்படுவதை நிறுத்துங்கள். அவன் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறான்” என மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

farina

farina

இந்த பதிலை கண்ட மற்றொரு நபர், “இவர் மிகவும் திமிர் பிடித்தவள். இவர் பக்கத்தில் எதையும் கமென்ட் செய்யாதீர்கள். இவளை பிளாக் செய்துவிடுங்கள். ரசிகர்கள் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்பதை மறந்துவிட்டாள். எப்போதும் ரசிகர்களிடம் திமிராக தான் பதில் கூறுகிறார். நிஜ வாழ்க்கையில் மிகவும் மோசமான குணம் கொண்டவர்” என வசைபாடி பதிவிட்டுள்ளார்.

அக்கறை கொண்ட ரசிகர்களிடம் பரீனா இவ்வாறு பேசியுள்ளது அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பரீனா நிஜ வாழ்க்கையிலும் வில்லன் தான் போல என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top