
Cinema News
பிறந்த நாள் வாழ்த்தா?.. எழுதி கொடுத்தத போட்டா இப்டிதான்!.. விஜயை வெளுக்கும் ரசிகர்கள்!…
Vijay Vijayakanth: நடிகர் விஜய்க்கு ஹிட் படங்கள் அமையாத போது அவரின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் பல நடிகர்களிடமும் சென்று ‘என் மகனை உங்கள் படத்தில் உங்கள் தம்பியாக நடிக்க வையுங்கள்’ எனக் கேட்டார். ஆனால் யாரும் முன் வரவில்லை. தனக்கு சினிமாவில் முக்கிய படங்களை கொடுத்த இயக்குனர் என்பதால் சம்பளமே வாங்காமல் அதற்கு ஒப்புக்கொண்டார் விஜயகாந்த். அப்படி உருவான செந்தூரப்பாண்டி திரைப்படம் விஜயை பி மற்றும் சி சென்டர்களில் கொண்டு சேர்த்தது.

அதன்பின் விஜய் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னனி நடிகராக மாறினார். அதேநேரம், விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல வருடங்கள் வீட்டிலிருந்தார். அப்போது அவரை ஒருமுறை கூட விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை. அது மட்டுமல்ல.. விஜய்க்கு செந்தூரப்பாண்டி படம் மூலம் விஜயகாந்த் உதவியது போல விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு விஜய் உதவ வேண்டும்.. விஜய் தன்னுடைய படத்தில் சண்முக பாண்டியனை நடிக்க வைக்க வேண்டும் என தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் கோரிக்கை வைத்தார்கள்.
ஆனால் விஜயோ அதை கண்டுகொள்ளவே வில்லை. தற்போது சினிமாவில் நடிப்பை நிறுத்திவிட்டு அரசியலுக்கும் போய்விட்டார். எனவே இனிமேல் அதற்கு சாத்தியமும் இல்லை. எனவே திமுக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் விஜயின் மீது கோபமாகவே இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இன்று விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி போட்டிருக்கிறார் விஜய். அதுவும் மாலை 4 மணிக்கு மேல்.. அந்த வாழ்த்து செய்தியில் ‘நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.
இதையத்து ‘இறந்தவர்களுக்கு யாரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார்கள்.. பிறந்த நாளில் நினைவு கூறுவார்கள் அல்லது புகழஞ்சலி செலுத்துவார்கள்.. இது கூட விஜய்க்கு தெரியாதா?. இறந்தவருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்’ என பலரும் அவரை திட்டி வருகிறார்கள்.

சிலரோ ‘50 வருஷத்துல இப்பதான் விஜயகாந்த் பிறந்தநாள் வந்திருக்கு.. கேவலமா ஓட்டு பிச்சை எடுக்காத ப்ரோ’ என விஜயை வெளுத்து வருகிறார்கள். விஜய் சினிமாவில் வளரும் போது அதாவது செந்தூரப்பாண்டி படம் வெளியான நேரத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் வந்தபோது ஒரு வாழ்த்து செய்தியை வெளியிட்டார் விஜய்.. அதோடு சரி.. அதற்குப்பின் எப்போதும் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு அவருக்கு விஜய் வாழ்த்து செய்தி சொல்லியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.