Categories: Cinema News latest news

தனுஷ் செய்யப்போகும் வேண்டாத வேலை… வேதனையின் உச்சத்தில் ரசிகர்கள்..

தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்திலும் தனது படப்பிடிப்புகளை முடித்துவிட்டார். இப்போது, நானே வருவேன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோத வாய்ப்புள்ளது என தெரிகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ செப்டம்பர் 30 அன்று வெளியாகிறது என அனைவரருக்கும் தெரியும். தற்போது, அதே தேதியில் ‘நானே வருவேன்’ படக்குழுவும் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக நம்பதக்க சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அந்த வகையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை இது உண்மையென்றால் ரசிகர்ளுக்கு சிறிய ஏமாற்றமாக அமையும். ஆனால், தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி அன்று ‘நானே வருவேன்’ டிரெய்லரை வெளியிட தயாஅமையும் ரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்களேன் – பொன்னியின் செல்வனின் புதிய நட்சத்திரங்கள்… ஒரிஜினலை தாண்டி வைரலாகும் விஜய், சூர்யா, நயன்தாரா, அனுஷ்கா….

‘திருச்சிற்றம்பலம்’ ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ‘நானே வருவேன்’ படத்தின் டிரைலர் அதே நாளில் வந்தால், அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமையும்.

Manikandan
Published by
Manikandan