Categories: Cinema News latest news

வாங்குன அடி பத்தலையா.?! தனுஷ் வெளியிட்ட புது தகவலால் அதிர்ந்து போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தனுஷின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ கடந்த ஜூலை 22 முதல் நெட்ஃபிக்ஸில் வெளியானது.

ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ ஆகியோரால் இயக்கப்பட்ட இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ரியான் கோஸ்லிங் டைட்டில் ரோலில் நடித்தார். மேலும் படத்தில் ‘அவிக் சன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். என்னதான் தமிழ் சினிமாவில் தனுஷ் அசுரன் நாயகனாக வளம் வந்தாலும் ‘தி கிரே மேன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு  வரவேற்பு கிடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதவாது, படத்தில், இவரது கதாபாத்திரம் வரும் ஒரு சில காட்சிகள் மட்டுமே நன்றாக இருந்ததாக சமூக வலைதளங்களில் படம் வெளியாகிய பின்பு விமர்சனம் செய்யப்பட்டது. மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே இப்படத்தின் இயக்குனர்கள்  ஒரு நேர்காணலில் பேசினார்கள்.

இதையும் படிங்களேன் – அது வேற வாய்…இது வேற வாய்…இப்படி மாட்டிக்கிட்டியே ஆண்டவா!…வீடியோ ஆதாரம் இதோ.

தற்போது அதனை தனுஷ் உறுதி செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் தி கிரே மேன் படத்தின் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதன் இரண்டாம் பாகத்தை உறுதி செய்துள்ளார். ஆனால், இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏற்கனவே வெளியான முதல் பாகமே எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை, இதுல இரண்டாம் பாகம் வேறயா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

Manikandan
Published by
Manikandan