×

நித்தி அகர்வாலுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள்... ஷாக் ஆகிய நித்தி...

தமிழ் சினிமாவின் புது வரவு நடிகையாக நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருப்பது அவரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறதாம். 
 

பொங்கல் வெளியீடாக தியேட்டர்களில் ரிலீஸான சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஹாட்ஸ்டாரில் ரிலீஸான ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நித்தி அகர்வால். இளம் புதுவரவான நித்தி அகர்வாலுக்கு ரசிகர்கள் காதலர் தின பரிசாக கோயில் கட்டியிருப்பது அவரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதாம். 


நித்தியின் மார்பளவு சிலையை வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து ரசிகர்கள் கும்பிடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து பேசிய நித்தி அகர்வால், ``இது அவர்களின் காதலர் தின பரிசு என என்னிடம் சொன்னார்கள். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதேநேரம், என் மீது அன்புபொழியுன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அந்தக் கோயில் எங்கே இருக்கிறது என சரியாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், சென்னையில் ஒரு இடத்தில் இருப்பது மட்டும் தெரியும். என்னுடைய தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களால் அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது’’ என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார் நடிகை நித்தி அகர்வால். 

From around the web

Trending Videos

Tamilnadu News