
Cinema News
வேற ஹீரோவுக்கெல்லாம் இது நடக்கவே நடக்காது!.. கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸில் பொங்கும் ரசிகர்கள்…
எண்பதுகளின் காலகட்டத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் துருவங்கள் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இவர்களுக்கு இணையான ரசிகர் படையை கொண்டிருந்தார் விஜயகாந்த். தனக்கென தனி ஒரு பாணியை அமைத்து தென்னக மக்களின் சூப்பர் ஸ்டார் ஆனார். இவரது படங்களில் சண்டைக் காட்சிகள் தனித்துவம் பெறும், இதனால் வெகு விரைவிலேயே ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார்.
ஆக்சன் ஹீரோவாக பல படங்கள் செய்திருந்தாலும் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது என்னவோ ”கேப்டன் பிரபாகரன்” தான். அதனாலேயே மக்கள் இவரை கேப்டன் என்று அழைக்க தொடங்கினர். விஜயகாந்தின் திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ஆகஸ்ட்-22 அதாவது இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

“இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பொங்கி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். முப்பது வருடத்திற்கு முன் நாங்கள் திரையரங்கில் எப்படி உற்சாகத்துடன் துள்ளி குதித்து இந்த படத்தை பார்த்தோமோ அதே மகிழ்ச்சி இப்போ இந்த படத்தை பார்க்கும் போது எங்களுக்கு வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் எல்லாம் 2k கிட்ஸ் கண்டிப்பாக பார்க்க வேண்டும். எவ்வளவு தத்துரூபமாக இந்த சண்டை காட்சிகள் நடித்திருக்கிறார் என்று தெரியும்”.
“ஒரு நடிகர் ரோப்பே இல்லாமல் சண்டை போடுகிறார் என்றால் அது எங்கள் கேப்டன் மட்டும் தான். இன்று எங்கள் கடவுளை பார்த்தது போல் இருந்தது. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி விஜயகாந்த் பேசும் வசனங்கள் இன்று எந்த நடிகர் பேசி வந்தாலும் படம் ரிலீஸ் ஆகாது. ஒவ்வொரு வசனமும் தீப்பொறி பறக்கும். அது சிங்கம் கர்ஜிக்கும் வகையில் இருந்தது. அந்த காலத்தில் எந்த வகையான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது”.
“படம் ஆரம்பித்து அரை மணி நேரம் விஜயகாந்த் வர மாட்டார் இந்த மாதிரி படம் வேற எந்த நடிகருக்கும் அமையாது. 4k குவாலிட்டியில் கேப்டனை பார்ப்பது கூடுதல் மகிழ்ச்சி தான்”. கேப்டனின் நினைவாக எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.